
தமிழகத்தில் அடிக்கடி மண்ணுளி பாம்பு விற்பனை செய்வதும் அவா்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருவதும் வாடிக்கையாக நடந்து வரும் சம்பவமாக இருந்து வருகிறது. மேலும் மண்ணுளி பாம்பு குறித்த எத்தனையே விழிப்புணா்வுகள் கொடுத்த பின்பும் இன்று வரையில் ரகசியமாக மண்ணுளி பாம்பு விற்பனை தொடா்ந்து கொண்டுதான் வருகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்தள்ள குற்றாலத்தில் மண்ணுளி பாம்பை விறக் முயற்சி செய்த 4 பேர் கைது செய்பப்பட்டனா்.
நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் ஒரு தனியார் விடுதியில் 4 பேர் சந்தேகப்படும்படியாக தங்கி இருந்தனர்
அவர்கள், மண்ணுளி பாம்பை விற்க முயற்சி செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து குற்றாலம் போலீசார் அந்த விடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்று, அங்கு தங்கி இருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் குற்றாலத்தை சேர்ந்த தங்கபாண்டியன் (வயது 48), கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஐசக் (42), சென்னையை சேர்ந்த மைக்கேல் ராஜ் (56), சங்கர் (50) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் தங்கி இருந்த அறையில் சோதனை செய்தனர். அங்கு ஒரு சாக்கு பையில் மண்ணுளி பாம்பு ஒன்று இருந்தது.
அந்த பாம்பை மும்பையில் உள்ள ஒரு நபரிடம் ரூ.6 லட்சம் கொடுத்து அதை வாங்கி வந்ததும். மற்றொரு நபருக்கு அதை ரூ.15 லட்சத்துக்கு விற்க முயற்சி செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கபாண்டியன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். அந்த மண்ணுளி பாம்பை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



