குஜராத் மாநிலம் சூரத்தில் சமீபத்தில் குழந்தைகளைக்கு ஆபத்து விளைவிக்கும் விளையாட்டு என PUBG தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது, பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கேக் பூசி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக துணை ஆய்வாளர் PL சௌத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில்., பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளிட்ட கொண்டாட்டங்களின் போது பொது இடங்களில் வைத்து ஒருவருவர் மற்றொருவர் மீது கேக் பூசி விளையாடுவது பிரிவு 144-ன் கீழ் குற்றமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறை ஆணை மீறி இவ்வாறான கொண்டாட்டத்தில் ஈடுப்படும் மக்கள் மீது இந்தியன் பீனல் கோர்ட் சட்ட பிரிவு 188-ன் தண்டிக்கப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


