பீர் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ள நிலையில், பீர் குடித்தே தனது உடல் எடையை 20 கிலோ வரை குறைத்திருக்கிறார் அமெரிக்க இளைஞர்.
அமெரிக்காவை சேர்ந்த டெல் ஹால் என்பவர் ஒரு பீர் தயாரிப்பு கம்பெனியில் பணியாற்றி வருகிறார். உடல் எடையை குறைக்க முடிவு செய்த அவர், நீர் மட்டுமே அருந்தும் டயட் இருக்க முயற்சி செய்துள்ளார். அதற்காக அவர் பணியாற்றிய நிறுவனத்தின் பீரையே 46 நாட்களுக்கு குடித்துள்ளார். அதை தவிர மற்ற எந்த உணவையும் எடுத்துக்கொள்ளவில்லை.
தற்போது அவரது உடல் எடை 44 பவுண்ட்கள் அதாவது சுமார் 20 கிலோ வரை குறைந்ததுள்ளது. மேலும் அவர் முன்பை விட தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.



