images 5 1 - 2026

செஷல்ஸ் தீவில் இந்திய மீனவர்கள் கைது..

சற்றுமுன்

செஷல்ஸ் தீவில் மேலும் 25 மீனவர்களை அந்தநாட்டு கடற்படையினர் கைதுசெய்தனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 19 தமிழகம், 6 வடமாநில மீனவர்களை
செஷல்ஸ் நாட்டு கடற்படை கைது செய்துள்ளது
இதுவரை செஷல்ஸில் 5 விசைப் படகுகளுடன், 33 தமிழகம், 25 வடமாநில மீனவர்கள் என 58 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த இருநாட்களுக்கு முன் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி தூத்தூரை சேர்ந்த 8 மீனவர்கள் இந்தோனேஷியாவில் கைதுசெய்தனர்.8 பேரும் அந்தமானிலிருந்து விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது கடற்படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இந்தோனேஷியா மற்றும் செ‌ஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

images 5 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.