15 ரன்னில் வெற்றி: காலிறுதிக்கு தகுதி பெற்ற வங்கதேசம்; தொடரும் இங்கிலாந்தின் சோகம்

bangladesh-cricketersஉலகக் கோப்பை போட்டிகளின் 33 வது லீக் சுற்று ஆட்டத்தில் இன்று அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில், 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்க தேச அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் இங்கிலாந்தின் சோகம் தொடர்கிறது. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்து வீசத் தீர்மானித்தது. இதை அடுத்து களம் இறங்கிய வங்க தேச அணி, துவக்கத்தில் இரு விக்கெட்களை தலா 2 ரன்களில் பறிகொடுத்த போதும், முகமத்துல்லாவின் பொறுப்பான ஆட்டம், சர்க்காரின் நிலைத்த ஆட்டத்தால் ரன் குவித்தது. சர்க்கார் 40 ரன் எடுத்தார். முகமதுல்லா 103 ரன் குவித்தார். முஷ்பிகுர் ரஹிம் 89 ரன் எடுத்தார். வங்க தேச அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ரன் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு 276 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி, துவக்கத்தில் சரியாக விளையாடியபோதும் பின்வரிசை சரிந்தது. அலி 19 ரன் எடுத்தார். பெல் 63 ரன் எடுத்தார். ஹேல்ஸ், ரூட் தலா 27ம், 29ம் எடுத்தனர். மோர்கன் டக் அவுட் ஆனார். டெய்லர் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது, இங்கிலாந்து அணியின் தோல்விக்கு வழிவகுத்தது. இருப்பினும் பட்லர் 65 ரன் எடுத்தும், வோகர்ஸ் 42 ரன் எடுத்தும், அணிக்கு நம்பிக்கை அளித்தனர். ஆயினும் ஜோர்டன், ப்ராட், அன்டெர்சன் ஆகியோர், 0,9,0 ரன்களில் ஆட்டம் இழந்து, அணியின் தோல்வியை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து அணி 48.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 260 ரன்கள் எடுத்து, 15 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டி, இங்கிலாந்து அணிக்கு மிக முக்கியமான போட்டியாக இருந்தது. அதில் தோற்று வெளியேறியது, இங்கிலாந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் இங்கிலாந்து அணி, உலகக் கோப்பை போட்டி லீக் சுற்றிலேயே வெளியேறிவிட்டது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories