நாட்டை விட்டு வெளியேற கோத்தபய ராஜபட்சவுக்கு தடை

உலகம்

gothapaya-rajapakshaகொழும்பு: இலங்கை முன்னாள் பாதுகாப்புச் செயலரும், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் சகோதரரும் ஆன கோத்தபய ராஜபட்ச, இலங்கையை விட்டு வெளியேற காலி நீதித்துறை நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காலி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மிதக்கும் ஆயுதக் குவியல் தொடர்பான விசாரணைகளின்போது, நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த மிதக்கும் ஆயுதக் குவியலில் இருந்த ஆயுதங்களும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய இன்னொரு பாதுகாப்பு நிறுவனத்தின் ஆயுதங்களும் முன்னர் மகிந்த ராஜபட்ச அரசின் காலத்தில் அச்சுறுத்தும் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக, போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், கோத்தபய ராஜபட்ச, இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.