சொத்துக் குவிப்பு வழக்கு: தீர்ப்பு வழங்கும் சூழல் வரை காத்திருந்தது ஏன்? – அன்பழகனுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

supreme-court-Indiaபுது தில்லி: சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் சூழல் வரை காத்திருந்தது ஏன் என்று மனுதாரர் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனுக்கு கேள்வி எழுப்பியதுடன், சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஆஜராகி வரும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க வேண்டும் என தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான விசாரணையில், ஜெயலலிதா பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்குரைஞர் பவானிசிங், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஆஜராக முடியாது என்றும், அவர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்துகொள்வதால் அவரை அரசு வழக்கறிஞராகத் தொடர அனுமதிக்கக்கூடாது என்றும் தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதே கோரிக்கையை முன்வைத்து, க.அன்பழகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் மனு மீதான விசாரணை இன்று (மார்ச் 9) நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். அதன் படி இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் மதன் பி லோகூர் தலைமையிலான அமர்வுக்கு வந்தது. அப்போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், பவானிசிங்கை நீக்கக் கோரும் மனு தொடர்பாக கர்நாடக அரசு மற்றும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் பதிலளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் மார்ச் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதே நேரம், அன்பழகன் தரப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒரு கேள்வியை எழுப்பினர். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கும் சூழல் நெருங்கும்வரை காத்திருந்தது ஏன் என மனுதாரரிடம் இந்தக் கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர்.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories