ஒட்டகத்தை மை டியர் என்றார் மனைவி: உன்னுடன் டைவர்ஸ் என்றார் கணவர்!

அடடே... அப்படியா?

camelரியாத்: சௌதி அரேபியாவில், தன்னைவிட ஒட்டகத்தின் மீது அதிக அன்பு கொண்டிருந்ததால், மனைவி ஒருவரை அவரது கணவர் விவாகரத்து செய்துள்ளார். சவுதி தலைநகர் ரியாத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மனைவியின் தந்தை வீட்டிற்கு அவருடன் சென்றார் கணவர். அப்போது அவளது தந்தை வளர்த்து வந்த அல் வலீஃப் என்ற ஒட்டகத்தைப் பார்த்த அந்தப் பெண், அதனிடம் தனது அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தினாள். மேலும் இந்த ஒட்டகம் தான் எனது டியர், ஸ்வீட்ஹார்ட் என அவள் தன் கணவனிடம் கூறியுள்ளார். இதைஎல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கணவர், அங்கிருந்து தனது வீட்டுக்குத் திரும்பும்போது, மீண்டும் அந்த ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டுள்ளார். அப்போது, அந்தப் பெண் தனது கணவரிடம் அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்துள்ளார். இதனால் எரிச்சலடைந்த அந்தக் கணவர், அவளை விவாகரத்து செய்வதாக அறிவித்து, அவ்வாறே செய்துள்ளார். இந்தச் செய்தி இணையதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.