நாளை குஜராத் வருகிறது சூரிய சக்தியால் இயங்கும் விமானம்!

உலகம்

first-high-altitude-flight-solar-impulse-2-8அபு தாபி: உலகம் முழுவதையும் சுற்றி வர முடியும் என்று காட்டுவதற்காக சாதனை முயற்சியாகத் தொடங்கப்பட்ட சூரிய சக்தியால் இயங்கும் விமானத்தின் உலக சுற்றுப் பயணத்தில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அபு தாபியில் இருந்து கிளம்பும் விமானம் நாளை குஜராத்துக்கு வருகிறது. சூரிய சக்தியில் இயங்கும் விமானம் தனது முதல் உலக சுற்றுப் பயணத்தை அபுதாபியிலிருந்து இன்று அதிகாலை தொடங்கியது. அங்கிருந்து ஓமன் சென்றுவிட்டு, நாளை இந்தியா வருகிறது. சுமார் 5 மாதங்கள் சூரிய சக்தியைக் கொண்டே உலகைச் சுற்றும் இந்த விமானம், தனது பயணத்தில் கிட்டத்தட்ட 22,000 மைல் தொலைவைக் கடக்கிறது. இந்த விமானத்தில் ஒரு சொட்டுக் கூட விமான எரிபொருள் பயன்படுத்தப் படவில்லை. இதில் ஒவ்வொரு பைலட்டும் தனியாக ஐந்து நாட்கள் பயணிக்கின்றனர். பயணத்தை தொய்வின்றித் தொடர யோகா, மனவலிமை ஏற்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு இடத்தைக் கடந்த பின்னும் 20 நிமிடம் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த விமானம் பறக்கும்போது விமானியால் அதன் காக்பிட்டில் எழுந்து நிற்க முடியாது. கழிவறை செல்ல வேண்டுமானால், இருக்கையை தள்ளிவிட்டுச் செல்ல முடியும். இந்த விமானத்தில் பயணிக்கும்போது, விமானிகளின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதற்கு தரையிலுள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் தகவல் தொடர்பு தொடர்ந்து இருக்க வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று இந்த விமானம் புறப்படும் நேரத்தில், காக்பிட்டில் அமர்ந்திருந்த விமானி போர்ச்பெர்க்குக்கு மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் ஆன்லைனில் பேசி வாழ்த்து தெரிவித்தார். நாளை இந்தியா வரும் இந்த விமானம் பின்னர் இங்கிருந்து பர்மா, சீனா ஆகிய நாடுகளுக்கு செல்லும். பின்னர், ஹவாய் தீவுகள், அமெரிக்காவில் உள்ள போனிக்ஸ், அரிசோனா மற்றும் நியூயார்க் என சுற்றிவிட்டு, அட்லான்டிக் பெருங்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயணம் செய்து இறுதியாக அபுதாபிக்குத் திரும்பும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.