regha sharma - 2026

ஹிஜாப்: வரவேற்கத் தகுந்த தீர்ப்பு: தேசிய மகளிர் ஆணைய தலைவர்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
regha sharma - 2026

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று ஹிஜாப் சா்ச்சை விவகார வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா இதுகுறித்து, ‘ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். மாணவர்கள் மதம், ஜாதி, இனம் என்று பிரிக்கப்படக் கூடாது.

பெண்கள் எந்த உடையை வேண்டுமானாலும் அணியலாம். அது அவர்களின் உரிமை. ஆனால், கல்வி நிலையங்கள் என்று வரும்போது சீருடை முறை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மாணவிகள் 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேலுமுறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.