மீண்டும் ஆட்சியில்… தடுக்க எவருமில்லை! பிஎம். மோடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

Published:

pm modi - 2026

பல்வேறு அரசியல் சர்ச்சைகளால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மூலம் வெளியாகாமல் போன பிஎம் நரேந்திர மோடி படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது. இந்தப் புதிய போஸ்டரில், தற்போது, பிஎம் நரேந்திர மோடி ஆட்சிக்கு மீண்டு வருகிறார். அவரைத் தடுப்பதற்கு எவருமில்லை என்று ஹிந்தியில் எழுதப் பட்டுள்ளது!

திங்கள் கிழமை இன்று, பி.எம். நரேந்திரமோடி திரைப் படத்தின் போஸ்டரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நடிகர் விவேக் ஓபராய் ஆகியோர் வெளியிட்டனர். பிரதமர் மோடியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப் பட்டுள்ள படம் இது. இதில், விவேக் ஓபராய், பிஎம் மோடியாக நடித்துள்ளார்.

இந்தப் படம், மக்களவைத் தேர்தல் நேரத்தில் வெளியிடப்படுவதாக திட்டமிடப் பட்டது. ஆனால் இந்தப் படம் வெளியானால், அது வாக்காளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தனர். இதை அடுத்து, தேர்தல் ஆணையம் இந்தப் படம் வெளியாகத் தடை விதித்தது.

இதை அடுத்து, தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23ம் தேதிக்கு அடுத்த நாள், வரும் 24ஆம் தேதி பி.எம்.நரேந்திரமோடி படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நடிகர் விவேக் ஓபராய் ஆகியோர் இன்று வெளியிட்டனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img