ஆரோக்கிய, அழகு குறிப்பு: முகம் பளப்பளப்பாகவும் இளமையாகவும் இருக்க..

சற்றுமுன் நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips 1 - 2026

2 தேக்கரண்டி லவங்கப்பொடி, 1 தேக்கரண்டி*** தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு நீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடை காலத்தில் இது அருமருந்து.

நைலான் கயிரை சோப்பு நீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.

அவரை இலைச்சாறை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் பேதி நிற்கும்.

நெல்லி இலைகளை அவித்து வடிகட்டிய நீரினால் வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் சீக்கிரமாக குணமாகும்.

வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கற்பூரவல்லி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், கபம் கலந்த இருமல் நீங்கும்.

வாழைப்பூவை கள்ளன் நீக்கி, அவித்து கசக்கி சாறு எடுத்து காலையில் 15 மில்லி சாப்பிட சீதபேதி குணமாகும்.

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்

நல்லெண்ணையில், வெள்ளைப்பூடு, பெருங்காயம், கற்பூரம் போட்டு காய்ச்சி தினசரி 3 வேளை இரண்டு சொட்டு காதில் விட்டுவர காதுவலி குணமாகும்.

முடக்கத்தான் இலை சாறில், சீரக பொடியை போட்டு ஊற வைத்து காதில் விட்டு வந்தால் வலி தீரும். சீழ்வடிதலும் நிற்கும்.

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.