6 மாத பேறுவிடுப்பை ரத்து செய்து… பச்சப் பிள்ளையுடன் ‘கொரோனா’ பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
srijana ias officer - 2026

குழந்தை பிறந்த 22 நாளில், தனது 6 மாத கால பேறு விடுப்பையும் ரத்து செய்துவிட்டு, பணிக்கு திரும்பியுள்ளார் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீஜனா.

கொரோனா வைரஸ் பரவல் என்னும் நெருக்கடியில், தாம் குழந்தை பெற்று மூன்று வாரங்களே ஆன நிலையில், பணிக்கு திரும்பியுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீஜனா குறித்து சமூகத் தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையராக உள்ள ஸ்ரீஜனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த மாதம் வரை பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், குழந்தை பிறந்த 22வது நாளில், மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார் ஸ்ரீஜனா. கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், காலை முதல் இரவு வரை அலுவலகத்திலேயே இருந்து அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வருவது குறித்து அவர் கூறிய போது, தனது தாயும், கணவரும் குழந்தையை கவனித்துக் கொள்வதாகவும், பால் புகட்டுவதற்காக 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் ஸ்ரீஜனா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.