‘மரணம் எங்கள் இலக்கு’ – வாட்ஸ்அப் குழுவில் பேச்சு: நீங்கள் எங்கள் இலக்கு – என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

nia office - 2026

திங்கள் கிழமை இன்று காலை தேசிய புலனாய்வு முகமையினர் கடலூரில் திடீரென சோதனை மேற்கொண்டனர். காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் ரஷீத் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை மேற்கொடு, ஒரு லேப்டாப், 4 பென்டிரைவ், 7 செல்போன்கள், 8 சிம்கார்டுகள் மற்றும் மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, தமிழகத்தில் சென்னை, கீழக்கரை உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையினர் (என்.ஐ.ஏ.,) சோதனை நடத்தினர். இதில், பல்வேறு பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ‘மரணம் எங்கள் இலக்கு’ என்று ஒரு ‘வாட்ஸ் ஆப்’ குழுவைத் தொடங்கி, அதன் வழியே பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை இந்தக் குழுவில் உள்ளவர்கள் பரிமாறி வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தக் குழுவைச் சேர்ந்த சிலரை போலீசார் கண்காணித்தனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ., கூடுதல் விசாரணை மேற்கொண்டது. இந்தக் குழுவில் உள்ளவர்களுக்கு தமிழகத்தில் தேசவிரோத, பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள், இன்று 10 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சென்னை, கீழக்கரை, தேவிப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் சந்தேக நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ., அதிகாரிகள்
அங்கிருந்த எலக்ட்ரானிக் சாதனப் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட சிலவற்றைக் கைப்பற்றினர். அவர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

1 thought on “‘மரணம் எங்கள் இலக்கு’ – வாட்ஸ்அப் குழுவில் பேச்சு: நீங்கள் எங்கள் இலக்கு – என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.