
பயணிகளுக்கு மகிழ்ச்சி பொங்க வியக்க வைக்கும் புதுமையான ரயில் பயண அனுபவத்தை தரும் செங்கோட்டை – புனலுார் -கொல்லம் மலை ரயில் பாதையில் விஸ்டாடோம்’ கண்ணாடி கூரை பெட்டிகள் கொண்ட ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
பயணிகள் வலியுறுத்தி வரும் இந்த கோரிக்கையை தெற்கு ரயில்வே செங்கோட்டை – -புனலுார் மலை ரயில் பாதையில் ‘விஸ்டாடோம்’ கண்ணாடி கூரை பெட்டிகள் ரயில் இயக்க சில மாதங்களுக்கு முன் ரயில்வே வாரியத்திற்கு தென்னக ரயில்வே பரிந்துரை செய்தது .
இயற்கை எழில் ததும்பும் செங்கோட்டை — புனலுார் மலை ரயில் பாதையில் ‘விஸ்டாடோம்’ கண்ணாடி கூரை பெட்டிகளுடன் ரயில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தை கேரள மாநிலத்துடன் இணைக்கும் மூன்று முக்கிய ரயில் வழித்தடங்களில் செங்கோட்டை – -புனலுார் வழித்தடம் பயணிகளுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும். 1904 முதல் பயன்பாட்டில் உள்ள 49.38 கி.மீ., மொத்த பயண துாரத்தில் மலையை குடைந்து 7 குகைகளும், 23 பெரிய பாலங்களும் அமைந்துள்ளன.
துரைப்பாதையில் செங்கோட்டையில் இருந்து புனலூர் வரையிலும் உயரமான மலைகள் மீதும் இரு மலைகள் இணைத்து கட்டப்பட்ட மிகப்பெரிய பாலங்கள் இதில் ஒன்று 16 கண் புகைப்படம் ஆகும் இந்த பாலங்கள் வழியே உச்சி மலை மீது ரயிலில் செல்லும் போது சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை தருகின்றது.
மேலும் பிரசித்தி பெற்ற ஆரியங்காவு கனவாய் தென்மலை குகை உட்பட மலைகளைக் குடைந்து குகைகள் அமைப்பும் இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது உள்ளாடு மட்டுமல்லாது வெளிநாடு சுற்றுலா பயணிகளையும் பெரிதும் கவர்ந்துள்ளது.
திருவனந்தபுரம் கோவளம் வர்கலா கடற்கரை பகுதிகளுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்த பாதையில் ரயில்களில் பயணிப்பது அதிகம் விரும்புகின்றனர்.
முன்பு கொல்லம் செங்கோட்டை இடையே பயணிகள் ரயில் இயங்கியது. கொல்லம் செங்கோட்டை திருநெல்வேலி இடையில் நேரடி ரயில் இயக்குவது தற்போது அகல பாதையாக அமைக்கப்பட்ட பின்பு இந்த ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது குறிப்பிடத் தக்கது.





