sabarimala panguni uthiram - 2026

பிரதிஷ்டை தின விழா; சபரிமலை நடை நாளை திறப்பு!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
sabarimala panguni uthiram - 2026

சபரிமலையில் பிரதிஷ்டை தின பூஜை ஜூன் 5ஆம் தேதி வைகாசி ஹஸ்தம் நட்சத்திரத்தில் நடைபெறும் விழாவுக்கு ஜூன் 4ம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு மறுநாள் பல்வேறு வகையான அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோவில் மூல விக்ரகம் ஐயப்பன் சிலை தீ சேதம் ஏற்பட்டது.தற்போதைய சிலை பல ஆண்டுகள் முன்பு வைகாசி மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இந்த நாளில் வருடம்தோறும் பிரதிஷ்டை தின பூஜைகள் சபரிமலை ஐயப்பனுக்கு நடத்தப் படுகிறது.

பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவ்வருட பிரதிஷ்டை தினம் ஜூன் 5ம் தேதி ஆகும்.

இதை முன்னிட்டு 4 ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். அன்று ஐயனின் தவ கோலம் களைந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கிறது. வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறாமல் இரவு நடை அடைக்கப்படும்.

ஜூன் 5 ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிரதிஷ்டை தின பூஜை நெய் அபிஷேகம் உட்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் தொடங்கி நடைபெறும் .இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

அதற்கு பின்னர், மீண்டும் ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை ஜூன் 14 ந் தேதி திறக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.