மாநிலங்களவையைக் குறிவைத்து முரண்டு பிடிக்கும் சித்தப்பா சுப்பாரெட்டி! ஜெகன் சமாதானம்!

Published:

jagan - 2026
  • அதிருப்தியில் சித்தப்பா.
  • இந்த இரண்டு மாவட்டங்களையும் கண்டுகொள்ளாத ஒய்வி சுப்பாரெட்டி.
  • களத்தில் இறங்கிய ஜெகன்.

ஆந்திர பிரதேசத்தில் ராஜ்ய சபை தேர்தல்களுக்கான வேட்பாளர்களை முடிவெடுப்பதில் ஒய்சிபியில் பரபரப்பு நேர்ந்தது. முக்கியமாக ராஜ்யசபா வேட்பாளராக தாம் இருப்போம் என்று ஆசையை வளர்த்துக் கொண்ட முதல்வர் ஜெகனின் சித்தப்பா, திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி, வாய்ப்பு கிடைக்காமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளூர் பஞ்சாயத்து தேர்தல்களுக்காக தனக்கு ஒப்புவித்த கோதாவரி மாவட்டங்களின் பொறுப்புகளை அவர் பாதியிலேயே விட்டு விட்டதாக தெரிகிறது. முன்பு அளித்த வாக்குறுதிப்படி தனக்கு ராஜ்யசபாவில் வாய்ப்பு வருமென்று ஒய்வி சுப்பாரெட்டி மிகவும் எதிர்பார்த்தார்.

2014 தேர்தலில் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பார்லிமென்ட் சீட்டில் வெற்றி பெற்ற சுப்பாரெட்டிக்கு 2019 ல் மட்டும் ஒய்சிபி யிலிருந்து முழங்கைதான் காட்டப்பட்டது.

அடுத்த தேர்தலில் ஒய்சிபி க்கு ஒவ்வொரு சீட்டும் நிச்சயமாக வெற்றி பெற வேண்டிய நிலையில் தெலுகுதேசம் கட்சியிலிருந்து வந்த மாகுண்ட்ட சீனிவாசுல ரெட்டிக்கு ஓங்கோலில் வாய்ப்பு கிடைத்தது.

அதற்காக சித்தப்பாவை சுப்பா ரெட்டியை தயார்படுத்திய ஜெகன், அதிகாரத்துக்கு வந்த பின் ராஜசபைக்கே அனுப்புகிறேன் என்று வாக்குறுதி அளித்தார். அதனால் அவர் தேர்தல் வாய்ப்பை விட்டுக்கொடுத்து ஒய்சிபி தரப்பில் கோதாவரி மாவட்டங்களின் பொறுப்புகளை ஏற்றார். ஒய்சிபி ஆட்சிக்கு வந்தபின் முதல் முறையில் காலியான 4 ராஜசபா இடங்களில் தனக்கு ஜெகன் ஒன்று கட்டாயம் தருவார் என ஏகப்பட்ட ஆசையை வளர்த்துக் கொண்டார் சித்தப்பா.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
subba reddy jagan mohan - 2026

எதிர்பார்த்தபடியே முதலில் அயோத்யாரெட்டிக்கும் ஒய்வி சுப்பாரெட்டி க்கு இரண்டு சீட்டுகள் தருவோம் என்றும் மேலும் இரண்டு சீட்டுகளுக்கு இதர வேட்பாளர்களை தேட வேண்டும் என்றும் நினைத்தார்கள்.

ஆனால் அதற்குள்ளே முகேஷ் அம்பானி அமராவதிக்கு வந்தது, தன் நபர் ஒருவருக்கு ஒரு சீட் வேண்டுமென்று கேட்டது கிடுகிடுவென்று நடந்துவிட்டன. அதனால் இரண்டு ரெட்டிகளுக்கு பதில் ஒருவருக்கு மட்டுமே இடம் அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அம்பானியின் மனிதருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கியதால் அயோத்தியா ரெட்டியோடு கூட தன் பெயரும் பரிசீலிப்பார்கள் என்று ஆசைப்பட்டார் சித்தப்பா.

ஆனால் மண்டலம் ரத்தானதால் “முன்னாள்” ஆகப் போகின்ற இரு பிசி வர்க்க மந்திரிகளை ராஜசபைக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இவர்களில் ஒருவரை அனுப்பி ஒருவரை நிறுத்தி விட்டால் வேறு மாதிரியாக புரிந்து கொள்ளப்படும் என்ற எண்ணத்தில் ஜெகன், மந்திரிகளான பில்லி சுபாஷ் சந்திரபோஸ், மோபிதேவி வெங்கட்ரமணா இருவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டி வந்தது. அதனால் ஒய்வி க்கு முழங்கையைக் காட்டிவிட்டார்கள்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

ஏபியில் இருந்து ராஜ்யசபைக்குச் செல்லும் நால்வரின் பெயரும் தீர்மானிக்கப்பட்டு விட்டதாக கட்சியிலிருந்து செய்தி தெரிந்து கொண்ட சித்தப்பா அதிர்ச்சி அடைந்தார். இரண்டு நாட்களாக கட்சித் தலைவர்களுக்குக் கூட சுப்பாரெட்டி பேச வாய்ப்பளிக்கவில்லை.

subba reddy - 2026

உள்ளூர் தேர்தலுக்காக அவர் இன்சார்ஜாக உள்ள கோதாவரி மாவட்டங்களின் பொறுப்புகளைக் கூட அவர் கண்டு கொள்வதை நிறுத்திவிட்டார். இதனால் ஒய்வி சுப்பாரெட்டி விவகாரம் முதல்வர் ஜெகன் வரைக்கும் சென்றது. அதனால் அவர் சித்தப்பாவோடு போனில் பேசியதாக தெரிகிறது. ஆந்திர பிரதேசத்தில் எதிர்காலத்தில் வரப்போகும் ராஜ்யசபா காலி இடங்களில் தவறாமல் வாய்ப்பளிப்பதாகக் கூறி ஒய்வியை சமாதானப்படுத்தி யதாக தெரிகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img