20a194dfec574bec98ff58d3f9dcde1b - 2026

சேற்றில் சிக்கிய யானை மீட்பு..

சற்றுமுன்

நீலகிரி மாவட்டம்
கூடலூர் அருகே, சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த காட்டுயானையை வன ஊழியர்கள் மீட்டனர்.

கூடலூர் பாடந்துரை, மரம்பிளாவு அருகே உள்ள தனியார் எஸ்டேட்டை ஒட்டிய சிறிய வனபகுதில் சேற்றில் சிக்கிய பெண் காட்டுயானை வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருந்தது.

20a194dfec574bec98ff58d3f9dcde1b - 2026

சுமார் 150 மீட்டர் தொலைவில், யானைக்கூட்டம் நின்றிருந்தது. அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள், அதனை பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வன ஊழியர்கள் விரைந்து சென்று, கயிறு மற்றும் மரக்கட்டைகளை பயன்படுத்தி, சுமார் ஒரு மணி நேரம் போராடி யானையை உயிருடன் மீட்டனர். தொடர்ந்து, கூட்டத்துடன் சேர்ந்த, யானை தன் குட்டிக்கு பால் கொடுத்தது, நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.’தகவல் கிடைத்த உடன், வன ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் யானை உயிருடன் மீட்கப்பட்டது’ என, அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.