அடுத்து வருகிறது சென்னை – மைசூரு-வந்தே பாரத் ரயில்..

Published:

நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை – மைசூரு இடையே வருகிற நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சுமாா் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவை கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.ஏற்கெனவே 3 வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்தில் இருந்து தில்லி செல்லும் 4-ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கிவைத்தார். 

இதையடுத்து, நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை – மைசூரு இடையே வருகிற நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கவிருக்கிறார். 
சென்னையிலிருந்து புறப்படும் இந்த ரயில் பெங்களூரு வழியாக மைசூரு சென்றடையும். இதன் மூலமாக, சென்னையில் முதல்முறையாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

images 91 - 2026
ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img