சிறிய விநாயகர் சிலைகள் தயாரிப்பு! வியாபாரிகள் வேதனை!

சற்றுமுன் தமிழகம்
vinayakar
vinayakar

விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் விநாயகர் சதுர்த்தியின் போது ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுண்டக்காமுத்தூர் பகுதியில் 1 அடி உயரம் மற்றும் அதற்கும் சிறிய விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து சிலை செய்பவர்கள் கூறும் போது வழக்கமாக ஒரு அடி முதல் 12 அடி வரை உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை தயாரிப்போம் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக விற்பனை பாதிக்கப்பட்டதால் விநாயகர் சிலைகள் தேங்கியது. எனவே வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரிய அளவிலான சிலைகளுக்குப் பதில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை தயாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் வழக்கமாக 1 லட்சம் வரை தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் தற்போது 10 ஆயிரம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.