health tips - 2026

அப்பாச்சி தீர்வு: மார்புச்சளி, உதிரக்கடுப்பு, பித்தநீர், உடல்வலு, கண்ணில் இரத்தம்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

கருணைக்கிழங்கு மருத்துவம்

கருணைக்கிழங்கு வாதத்தையும். கபத்தையும் குறைக்கும். மூலம் குணமாகும். வயிற்றுப் பூச்சிகள் சாகும். டி.பி. நோய் தீரும். வாந்தி வராமல் தடுக்கும். பசியைத் தூண்டும்.

மார்புச் சளிக்கு…

துளசி இலை, தும்பை இலை, கார வெற்றிலை சேர்த்துக் கஷாயம் வைத்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாள்கள் சாப்பிட மார்புச் சளி வெளியேறும்.

சிறந்த டானிக்

பொன்னாங்கண்ணிக் கீரையைச் சாறெடுத்து ஒரு லிட்டர் சாறுடன் ஒன்றரை கிலோ கற்கண்டு சேர்த்து சர்பத்தாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு வேளைக்கு அரை அவுன்ஸ் சாப்பிட்டு வரலாம். இதற்கு இணையான டானிக் வேறொன்றும் இல்லை.

உதிரக் கடுப்பு மறைய…

வாழைப் பூவை சாறெடுத்து அத்துடன் பனங்கற்கண்டு கலந்து உள்ளுக்கு சாப்பிட்டு வர உதிரக் கடுப்பு மறைவதுடன், வெள்ளை நோயும் நீங்கும்.

பித்த நீர் வெளியாக…

ரோஜாப்பூ கஷாயத்தை பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர குடற்கழிவுடன் பித்த நீரும் வெளியேறும்.

கண்களில் இரத்தம் காண்கிறதா?

இருவாட்சிப் பூவை எடுத்துக் கசக்கி இரண்டு சொட்டுக்கள் கண்ணில் விட உஷ்ண மேலீட்டால் இரத்தம் காண்பது குணமாகும்.

உடல் வலுப்பெற…

முருங்கைப் பூவை பசும்பாலுடன் சேர்த்துக் காய்ச்சி பருகி வர உடல் வலுவடையும். உடல் சூடு குறையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.