குஜராத் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ஸ்ரீசாந்த் பெண்கள் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது இங்கு சுமார் 1500 மாணவிகள் பயின்று வருகின்றனர் மேலும் கல்லூரி கட்டுப்பாட்டில் விடுதி ஒன்றும் இயங்கி வருகிறது.
இங்கு அப்பகுதியை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த 68 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு மாதவிடாய் காலங்களில் மாணவிகளுக்கு தனியாக சமைப்பதும் அவர்களை ஒதுக்குவதும் வழக்கம்.
இந்நிலையில் மாதவிடாய் காலத்தில் கல்லூரி வளாகத்தில் உள்ள கோவிலுக்கும் சமையலறைக்கும் பெண்கள் செல்வதாக விடுதி நிர்வாகம் முதல்வருக்கு புகார் அளித்துள்ளது அதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் கல்லூரியில் தங்கியுள்ள அனைத்து மாணவிகளையும் விசாரணைக்கு அழைத்துள்ளது.
அதுமட்டுமின்றி முதல்வரின் உத்தரவின் பேரில் பெண் ஊழியர்கள் 68 மாணவிகளின் ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை வைத்து யார் மாதவிடாய் காலத்தில் உள்ளனர் என சோதனையை மேற்கொள்ள முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இதுகுறித்து புகார் அளித்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக கல்லூரி முதல்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் மாணவர்களிடம் இவ்வளவு மோசமாக நடந்துகொண்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் பொங்கி எழுந்து வருகின்றனர்.
Gujarat: 68 girl students of Shree Sahajanand Girls Institute (SSGI) in Bhuj were reportedly asked to remove their innerwear to prove that they were not menstruating. pic.twitter.com/fG0YZZNd70
— ANI (@ANI) February 14, 2020