Sweet Corn Cheese Knuckles - 2026

குட்டீஸ் விரும்பும் ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Sweet Corn Cheese Knuckles - 2026

ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ்
தேவையான பொருட்கள்

ஸ்வீட் கார்ன் தானியம் – 1 கப்
மக்காச்சோள மாவு – 4 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு – 1
பிரெட் தூள் – கால் கப்
சீஸ் துருவல் – கால் கப்
மைதா மாவு – கால் கப்
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

ஸ்வீட் கார்னை வேகவைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, மசித்த உருளைக்கிழங்கு, சீஸ் துருவல், மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு, சேர்த்து நன்றாக பிசையவும்.பிறகு மாவை விரும்பிய வடிவில் உருட்டி வைக்கவும்.அகலமான தட்டில் மைதா மாவுடன், பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.உருட்டிய நக்கட்ஸ்களை மைதா கலவையில் புரட்டி எடுத்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.வாணலியில் எண்ணெயை காய விட்டு உருட்டி வைத்த நக்கட்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூப்பரான ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ் தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.