pension - 2026

பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு கூறும் தகவல்!

சற்றுமுன் அடடே... அப்படியா? தமிழகம்
pension - 2026

பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று தமிழக அரசு பணியாளர் சங்கம் கோரிக்கைக்கு தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் 1.4.2003 அன்றோ அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

அவற்றை நன்கு பரிசீலித்து உரிய முடிவுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் வைத்த கோரிக்கைக்கு தமிழக நிதித்துறை செயலாளர் தலைமையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை பழைய ஓய்வூதியத்திற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.