images 6 1 - 2026

இருநாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக கவர்னர்..ஹெச். ராஜா கேரளா கவர்னராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்?..

இந்தியா சற்றுமுன் தமிழகம்

பா.ஜ.க தேசிய செயலராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த, மூத்த தலைவர் ஹெச். ராஜா அருகில் உள்ள மாநிலங்களில் கவர்னராக நியமிக்கப்பட உள்ளதாக பலரும் கூறிவருகின்றனர்

தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் கவர்னராக உள்ளார். மற்றொரு மூத்த தலைவர் இல. கணேசன், மணிப்பூர் கவர்னராக உள்ளார்.
இந்நிலையில், தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச். ராஜா வை பா.ஜ.க தலைமை சமீபத்தில் வரவழைத்து பேச்சு நடத்தியதாகவும் இவருக்கு கேரள கவர்னராகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது கேரள கவர்னராக உள்ள ஆரிப் முகமது கான், வேறு மாநிலத்துக்கு மாற்றப்படலாம் என, தெரிகிறது. இதற்கிடையே தமிழக கவர்னர் ரவி, இன்று டில்லி செல்கிறார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவர் சந்திக்கிறார்.ஏற்கனவே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆளுனர் மீது புகார் கொடுத்துள்ளதாக கூறப்பட்டு தமிழிசை அடுத்தடுத்து டெல்லி சென்றுவந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று இருநாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

டெல்லி செல்லும் கவர்னர் ஜனாதிபதி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி உள்ளிட்டோரை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், அப்போது தமிழக நிலவரம் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா மீது கவர்னர் ஆர்.என்.ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர கோரி தமிழக அரசின் சார்பில் தொடர் வலியுறுத்தல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கவர்னரின் டெல்லி பயணம் முக்கியம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தகைய மாற்றம் நிகழும் என இன்று மாலைக்குள் தெரியவரும் என கூறப்படுகிறது.

images 6 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.