முதல் முறையாக பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
இந்தாண்டு முதல், பதினொன்றாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடை பெறுகிறது. தமிழகம் முழுவதும் இன்று தொடங்கும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
இன்று தொடங்கும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், தனித்தேர்வர்கள் உட்பட 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்விற்காக மொத்தம் 2 ஆயிரத்து 795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.