Dhinasari Home page

ரஷ்ய விஞ்ஞானிகள்    மருத்துவாழ் மலை அனுமானுக்கு பூஜைகள் செய்து வழிபாடு…

சற்றுமுன்

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணியாற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 4 பேர்   மருத்துவாழ் மலை உச்சிக்கு சென்று அனுமான் சுவாமிக்கு அபிஷேக பூஜைகள் செய்து வழிபட்டனர்.

கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்ட பதியில் மருந்து வாழ் மலை அமைந்து உள்ளது. இந்த மலை சுமார் 2 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்டது ஆகும். இந்த மலையை சுற்றி 16 கிலோ மீட்டர் கிரிவலப் பாதை அமைந்து உள்ளது. 
இந்த மலையின் உயரத்தை அந்தப்பகுதி மக்கள் ஒன்றாம் மடம், இரண்டாம் மடம், மூன்றாம் மடம் மற்றும் மொட்டை (உச்சி) என நான்கு பகுதிகளாக பிரித்து கூறுகின்றனர். இந்த நான்கு பகுதிகளிலும் ஒவ்வொரு கோவில் உள்ளது. 
பக்தர்கள் மலையில் நடந்து சென்று தங்களால் எந்த அளவிற்கு மலையின் உயரத்தை அடைய முடியுமோ அந்த அளவிற்கு நடந்து சென்று அங்கு இருக்கும் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்புவது வழக்கம். அந்த அளவுக்கு ஆன்மீகம் நிறைந்த மலையாக இந்த மலை அமைந்து உள்ளது. மேலும் இந்த மலைப் பகுதி முழுவதும் அரிய வகையிலான மூலிகைகள் வளர்வதாக கூறப்படுகிறது. 
எனவே தற்போது இந்த மலை முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இத்தனை சிறப்புகள் மிக்க மருந்துவாழ் மலைக்கு  தற்போது விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள்  அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளனர்.
மேலும் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் மலையில் அமைந்துள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். ஞாயிற்று கிழமை அதிகாலையில் நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த ஆன்மீக குழுவினர் ஒவ்வொரு வாரமும் மருத்துவாழ் மலையில் ஆன்மீக நடை பயணமாக உச்சிக்கு சென்று அங்குள்ள 5 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். 
அப்படி சென்ற பக்தர்களுடன்  கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணியாற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 4 பேர்   மலை உச்சிக்கு சென்று உள்ளனர். அங்கு சென்று அனுமான் சுவாமிக்கு அபிஷேக பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் அந்த மலையை பற்றிய சிறப்புகளை ஆன்மீக பக்தர்களிடம் கேட்டு வியந்து உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.