மும்பையை அடுத்த நள்ளசோபராவின் மேற்கு பகுதியில் உள்ள பண்டார் ஆலி பகுதியில் ‘இந்து கோவான்ஷ் ரக்ஷா சமிதி’ என்ற அமைப்பின் உறுப்பினர் வைபவ் ராவுத் கைது செய்யப்பட்டார். அவரது வீடு மற்றும் கடைகளில் தீவிரவாத தடுப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து அதிக அளவில் வெடிகுண்டுகளை கைப்பற்றினர். சில புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தீவிரவாத தடுப்புப் படையினர் ராவத்தை மும்பை அழைத்து வந்து காவலில் வைத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ராவத்தின் மீதான இக்கைது நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இந்து ஜனஜாக்ருதி சமிதி, ”மாலேகான் பாகம் 2” என்று தெரிவித்துள்ளது.
பசு பாதுகாவலர் கைது ”மாலேகான் பாகம் 2”: இந்து ஜனஜாக்ருதி சமிதி
Popular Categories



