ipl 2022 - 2026

IPL 2022: குஜராத் Vs சன்ரைசர்ஸ்

விளையாட்டு Featured இந்தியா
ipl 2022 - 2026

ஐபிஎல் 2022 – 27 ஏப்ரல் 2022 குஜராத் vs சன்ரைசர்ஸ். – K.V. பாலசுப்பிரமணியன்

நேற்று, ஏப்ரல் இருபத்தியேழாம் நாள் குஜராத், சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 40ஆவது போட்டி நடந்தது.

சன்ரைசர்ஸ் அணி (195/6, அபிஷேக் ஷர்மா 65, ம்ர்க்ரம் 56, ஷஷாங்க் சிங் 25, ஷமி 3/39) குஜராத் அணியிடம் (199/5, சஹா 68, திவாத்தியா 40*, ரஷீத்கான் 31*, உம்ரான் மலிக் 5/25) தோற்றுப்போனது.

டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர், அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார். மறுமுனையில் கேப்டன் வில்லியம்சன் 5 ரன்களிலும், ராகுல் திரிபாதி 16 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், அபிஷேக் சர்மாவுடன் மர்க்ராம் இணைய, ஆட்டம் விறுவிறுப்படைந்தது.

இருவரும் குஜராத் அணியின் பந்துவீச்சை விளாசினர். அபிஷேக் சர்மா 65 ரன்களிலும், மர்க்ராம் 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிகோலஸ் பூரன், வாஷிங்டன் சுந்தர் இருவரும் தலா 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. கடைசியில் அதிரடி காட்டிய ஷஷாங் சிங், ஆறு பந்துகளில் 3 சிக்சர்களுடன் 25 ரன்களும், ஜான்சன் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

குஜராத் தரப்பில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி வில்லியம்சன், ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன் ஆகியோரை அவுட் ஆக்கினார். யாஷ் தயாள், ஜோசப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. விருத்திமான் சாஹா ஒரு நல்ல விக்கட் கீப்பர். அவருக்குப் பதிலாக, கீப்பிங் சுமாராக இருந்தாலும் பேட்டிங் நன்றாக இருக்கிறது என தோனி, ரிஷப் ஆகியோர் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆனால் இன்று சாஹா (38 பந்துகள், 68 ரன், 11 ஃபோர், 1 சிக்சர்) அதிரடியாக ஆடினார்.

ஷுப்மன் கில், ஹார்திக் பாண்ட்யா இருவரும் சரியாக விளையாடவில்லை. 16 ஓவர் முடிவில் குஜராத் அணி ஐந்து விக்கட்டுகளை இழந்து 140 ரன் எடுத்திருந்தது.

24 பந்துகளில் 56 ரன் அடிக்கவேண்டிய நிலை. ரஷீத் கானும் திவாத்தியாவும் 17ஆவது ஓவரில் 9 ரன்கள் எடுத்தனர். 18 ஆவது ஓவரில் 12 ரன்கள். 19 ஆவது ஓவரில் 13 ரன்கள். எனவே கடைசி 6 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டது.

திவாத்தியா ஒரு சிக்சரும் ரஷீத் கான் மூன்று சிக்சரும் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.