வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ. 30 கோடி! பூ விற்கும் பெண்ணிடம்? அதிகாரிகள் அதிர்ச்சி!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள்
poo kadai - 2026

கர்நாடக மாநிலத்தில் சந்தையில் பூ விற்று வந்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ. 30 கோடி பணம் வரவு வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் சன்னபட்னா என்ற பகுதியில் வசித்து வருபவர் மாலிக் புர்கான். இவருடைய மனைவி ராகியம்மாள்.
இவர்கள் இருவரும் பூ விற்று வருகிறார்கள்.

money - 2026

இந்நிலையில், ராக்கியம்மாள் வங்கி கணக்கிற்கு மிகப் பெரிய தொகை ஒன்று கைமாறியதாக கூறி வங்கி அதிகாரிகள் அவரை வங்கிக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரித்தனர்.

அதில், அவருடைய வங்கி கணக்கில் ரூ.30 கோடி பணம் வரவு வைகப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது கணவர் கூறியுள்ளதாவது: ஆன்லைனில் சீலை வாங்கியதற்கு பரிசு கிடைத்துள்ளதாகக் கூறி, சிலர் வங்கி புத்தகத்தை வாங்கிச் சென்றதாக மாலிக் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வருமான வரித்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தவுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.