December 9, 2024, 1:18 PM
30.3 C
Chennai

அது வேற வாயி; இது ‘…’ வாயி..! அது திருநாவுக்கர’சு’; இது திருநாவுக்கர’சர்’!

jayalalitha1989

1989ல் அன்றைய திமுக., ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில், தமிழக சட்டமன்றத்தில், அதிமுக., பொதுச் செயலாளராக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்து, திமுக.,வினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள் என்று கூறப்படும் பிரச்னை இப்போது கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அரசியல் மட்டத்திலும், சமூக ஊடகங்களிலும் பலரும் இது குறித்து பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

அவரவர் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் அரசியல் நோக்கத்துக்கு ஏற்ப, நடந்ததைத் திரித்தும் மாற்றியும் பேசி வருகின்றனர். அவர்களில் மிக முக்கியமானவர் தற்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் பதிலளித்துப் பேசுகையில், திமுக.,வினர் 1989ல் மாண்பு கூடிய சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்து பெண்மைக்கே அவமரியாதை செய்தவர்கள். அத்தகைய துச்சாதனர்களான திமுக.,வினர் இங்கே சபையில் திரௌபதி பற்றி பேசுகின்றனர். .. என்று ஆவேசமாக விமர்சித்துப் பேசினார். ஆனால், அது ஒரு அரசியல் நாடகம் என்று கூறி, திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, 1989 ல் சட்டசபையில் நடந்த சம்பவம் குறித்து அன்றைய அதிமுக., சட்டமன்ற உறுப்பினரும், இன்றைய திமுக.,வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸைச் சேர்ந்தவருமான திருநாவுக்கரசு என்ற திருநாவுக்கரசர் அளித்த பேட்டி நாளிதழ்களில் வெளியானது.

அந்த பேட்டியில் அதிமுக., உறுப்பினர் திருநாவுக்கரசு, “எங்களை தாக்கி விட்டு நாங்கள் தாக்கியதாக கருணாநிதி கற்பனை செய்கிறார் என்று கூறியுள்ளார். துச்சாதனர்கள், துரியோதனர்கள் விரைவில் அழிவார்கள். கொலை முயற்சி வழக்கு பதிய வேண்டும், விரைவில் திமுகவினர் அழிந்து போவார்கள்” என்று பேட்டி அளித்துள்ளார்.

ALSO READ:  சோழவந்தான்: ஆயுத பூஜை போல கொண்டாடப்பட்ட விஸ்வகர்ம விழா!

1989ல் அவர் அளித்து அன்றைய நாளிதழ்களில் வெளியான பேட்டி…

thirunavukkarasar news bi

இந்நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், திமுக.,வுடன் இணைந்து அரசியல் செய்ய வேண்டிய நிலையில் உள்ள திருநாவுக்கரசர், அன்று தான் சொன்னதையே இல்லை என்று மறுத்துப் பேசி, திமுக.,வை தாஜா செய்து பிழைக்க வேண்டிய நிலையில் உள்ளார் என்பதைத்தான் அவரது அண்மைய பேட்டி காட்டுவதாக சமூகத் தளங்களிலும், அரசியல் மட்டத்திலும் பேச்சு எழுந்ததுள்ளது.

தற்போது திருநாவுக்கரசர் கூறியது, ‘ஜெ., சேலையை பிடித்து யாரும் இழுக்கவில்லை-‘ என்பதுதான்!

சென்னை விமான நிலையத்தில், திருநாவுக்கரசர் 2023 ஆக.13 நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது…

தமிழக சட்டசபையில், 1989ல் நடந்த சம்பவம் குறித்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் தமிழிசை எல்லாம் பேசுகின்றனர்; அவர்கள் அப்போது, அரசியலில் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. சட்டசபையில் தற்போது இருப்பது போல, அப்போது, ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே இடைவெளி இருக்காது. முதல்வர் கருணாநிதி, அமைச்சர் அன்பழகன் இருக்கைக்கு எதிர் வரிசையில், எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா அருகில் தான், நானும், காங்., தலைவர் மூப்பனாரும், குமரி அனந்தனும் அமர்ந்திருந்தோம்.

ALSO READ:  IND Vs BAN Test: இரண்டாவது டெஸ்டையும் வென்று இந்திய அணி அசத்தல்!

ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்து, அப்போதைய முதல்வர் கருணாநிதி, பட்ஜெட்டை சிறிய மேஜை மீது வைத்து வாசித்தார். அப்படி பட்ஜெட் வாசிக்கும் போது, பின்னால் இருந்த ஒரு எம்.எல்.ஏ., பட்ஜெட் புத்தகத்தை இழுத்தார்.

உடனே கருணாநிதி சத்தம் போட்டு திரும்பும் போது, அவரின் கண்ணாடி கழன்று கீழே விழுந்தது. அவர் தடுமாறினார். உடனே, மூத்த அமைச்சர்கள் முதல்வரை, அறைக்கு அழைத்து சென்று விட்டனர். இந்த நேரத்தில், பின் இருக்கைகளில் இருந்த, தி.மு.க., – எம்.எல்.ஏ.க்கள், கருணாநிதியின் முகத்தில், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் குத்தி விட்டதாக நினைத்து விட்டனர்.

இதனால், பட்ஜெட் புத்தகங்களை எங்களை நோக்கி வீசினர். ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பாக நானும், கே.கே.எஸ்.எஸ்.,ஆரும் நின்றோம். அப்போதும், சில புத்தகங்கள் ஜெயலலிதா தலையிலும், என் மீதும் விழுந்தன. புத்தகம் விழுந்ததால், ஜெயலலிதாவின் தலை கலைந்தது உண்மை. உடனே வீட்டிற்கு போகலாம் என்றதும், ஜெயலலிதா சரி என்றார்; வீட்டிற்கு சென்று விட்டோம்.

ALSO READ:  மாணவர்களுக்கான ‘திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி’; மதுரை ஆட்சியர் அழைப்பு!

சண்டை, அசம்பாவிதம் நடந்தது எல்லாம் உண்மை தான். ஆனால் அடி, தடியோ, ரத்த காயங்களோ கிடையாது. கருணாநிதி முகத்தில் குத்தி விட்டதாக தி.மு.க.,வினரும், ஜெயலலிதா சேலையைப் பிடித்து இழுத்ததாக அ.தி.மு.க.,வினரும் பிரசாரம் செய்தனர். ஆனால், இந்த இரண்டு சம்பவங்களும் உண்மை கிடையாது… என்று திருநாவுக்கரசர் கூறினார்.

அவரது இந்தக் கருத்து சமூக மட்டத்தில் பெரும் விவாதப் பொருள் ஆகியுள்ளது அது வேற வாயி, இது நாற வாயி என்ற வடிவேலுவின் சினிமா வசனங்களையும், அன்று அவர் திருநாவுகரசு, இன்று அவர் திருநாவுக்கரசர், என்பதால் அவர் அப்படித்தான் பேசுவார் என்றும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

author avatar
ரம்யா ஸ்ரீ

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week