sbi - 2026

வாடிக்கையாளர்களுக்கு.. எஸ்பிஐ எச்சரிக்கை!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா லைஃப் ஸ்டைல் வணிகம்
sbi - 2026

டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இதையெல்லாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். பணம் அனுப்புவது, கட்டணம் செலுத்துவது மற்றும் ஷாப்பிங் செய்வது போன்ற பல்வேறு விஷயங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவே முடிந்து விடுகிறது.

அதனால் போன்பே, கூகுள் பேய் மற்றும் பேடிஎம் போன்ற மொபைல் ஆப் நிறைய வந்து விட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நிறைய வசதிகள் இருந்தாலும் அதில் ஆபத்துக்களும் உள்ளன. ஆன்லைன் நிதி மோசடி போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டே இருக்கிறது.

அதனை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பாக இருக்கவும் வங்கிகள் தரப்பில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் மோசடிகள் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களை மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளது. அதன்படி ஐந்து விஷயங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொண்டே மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

PIN நம்பர் வித்தியாசமானதாக கண்டுபிடிக்க முடியாததாக இருக்க வேண்டும்.

UPI பரிவர்த்தனை செய்யும்படி தெரியாத இடத்திலிருந்து கோரிக்கை வந்தால் அதில் செல்லக் கூடாது.

இதுபோன்ற மோசடிகள் குறித்த சந்தேகம் இருந்தால் உடனடியாக வங்கிக்கு புகார் கொடுக்க வேண்டும்.

பணம் அனுப்புவதற்கு மட்டுமே PIN நம்பர் தேவை. பணத்தை பெறுவதற்கு நீங்கள் PIN நம்பர் பதிவிடத் தேவையில்லை.

உங்களுக்கு தெரியாமல் பரிவர்த்தனை நடைபெற்றது தெரியவந்தால் உடனடியாக உங்களுடைய UPI கணக்கை டீ-ஆக்டிவேட் செய்ய வேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.