ipl 2022 - 2026

IPL 2022: மும்பை Vs ஹைதராபாத்

விளையாட்டு Featured இந்தியா
ipl 2022 - 2026

ஐ.பி.எல் மே 17, 2022 – மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
– K. V. பாலசுப்பிரமணியன் –

நேற்று, ஐபிஎல்லின் 65ஆவது ஆட்டம் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மும்பை, சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையே நடந்தது.

சன்ரைசர்ஸ் அணி (193/6, ராகுல் திரிபாதி 76, பிரியம் கர்க் 42, பூரன் 38, ரமன்தீப் சிங் 3/20) மும்பை அணியை (190/7, ரோஹித் 48, இஷான் 43, டிம் டேவிட் 46, உம்ரான் மாலிக் 3/23) 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. எனவே சன்ரைசர்ஸ் அணி மட்டையாட வந்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா மூன்றாவது ஓவரின் நான்காவது பந்தில் 9 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் பிரியம் கர்க் (26 பந்துகள் 42 ரன், 2 சிக்சர், 4 ஃபோர்), ராகுல் திரிபாதி (44 பந்துகள் 76 ரன், 3 சிக்சர், 9 ஃபோர்) நிக்கோலஸ் பூரன் (22 பந்துகள் 38 ரன், 3 சிக்சர், 2 போர்) நன்றாக விளையாடினர். ராகுல் திரிபாதி 17.2ஆவது ஓவரில், நான்காவதாக ஆட்டமிழந்தார்; அப்போது அணியின் ஸ்கோர் 174/4. அதற்குப் பின்னர் ஆட வந்த மர்கரம் (2 ரன்), கேன் வில்லியம்சன் (8 ரன்), வாஷிங்டன் சுந்தர் (9 ரன்) ஆகியொரை கட்டுப்படுத்தும் விதமாக மும்பை அணி பந்து வீசியதால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிறகு 193 ரன் எடுத்தது.

இந்தக் கடினமான இலக்கை அடைய ஆடவந்த மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மாவும் இஷான் கிஷனும் சிறப்பாக விளையாடினர்.

ரோஹித் 10.4ஆவது ஓவரில் 48 ரன்னிற்கு அவுட் ஆனார். இஷான் அடுத்த ஓவரில் 43 ரன்னிற்கு ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 101/2. அதன் பின்னர் டேனியல் சாம்ஸ் (11 பந்துகளில் 15 ரன்), திலக் வர்மா (9 பந்துகளில் 8 ரன்) எடுத்ததால் ரன்ரேட் குறையத் தொடங்கியது.

ஸ்டப்ஸ் துரதிர்ஷ்டவசமாக ஒரு ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் அடித்த ஒரு பந்து பந்துவீச்சாளராகிய புவனேஷ்குமார் கையில் பட்டு எதிர்தரப்பு ஸ்ட்ம்பில் பட்டுவிட்டது. இதனால் ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். அப்போது 18 பந்துகளில் 45 ரன் அடிக்கவேண்டிய நிலை.

நடராஜன் வீசிய அந்த 17ஆவது ஓவரில் டிம் டேவிட் நாலு சிக்சர் அடித்தார். ஆனால் கடைசி பந்தில் அவசரப்பட்டு ரன் அவுட் ஆனார். அப்போது மும்பை அணிக்கு 12 பந்துகளில் 19 ரன்கள் எடுக்கவேண்டியிருந்தது. 19ஆவது ஓவரை புவனேஷ்குமார் ஒரு மெய்டனாக வீசி, ஒரு விக்கட்டையும் எடுத்தார். எனவே கடைசி ஓவரில் 19 ரன் எடுக்கவேண்டியிருந்தது.

ஆனால் மும்பை வீரர்களால் 15 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே மும்பை அணி தோவியைத் தழுவியது.ராகுல் திரிபாதி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.