ipl 2022 - 2026

IPL 2022: மும்பை Vs டெல்லி

விளையாட்டு Featured இந்தியா
ipl 2022 - 2026

ஐ.பி.எல் மே 21, 2022 – மும்பை vs டெல்லி

-K.V. பாலசுப்பிரமணியன் –

நேற்று, ஐபிஎல்லின் 69ஆவது ஆட்டம் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையே நடந்தது.

டெல்லி அணியை (159/7, போவல் 43, பந்த் 39, ப்ருத்வி ஷா 24, பும்ரா 3/25 ரமந்தீப் சிங் 2/29) மும்பை அணி (160/5, இஷான் கிஷன் 48, ப்ரிவிஸ் 37, டிம் டேவிட் 34, திலக் வர்மா 21, தாகூர் 2/32) 5 விக்கட் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே டெல்லி மட்டையாட வந்தது.

வார்னர் (5 ரன்), மார்ஷ் (பூஜ்யம்) இருவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். காயம் குணமடைந்து இன்று விளையாட வந்த ப்ருத்வீ ஷா அதிரடியாக விளையாடவில்லை. அவரால் 23 பந்துகளில் 24 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. 10 ஓவர் முடிவில் டெல்லி அணி நான்கு விக்கட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் போவல் மற்றும் பந்த் ஆட்டத்தால் ரன்ரேட் ஏறத்தொடங்கியது.

இருப்பினும் மும்பை அணியினரின் சிறப்பான பந்துவீச்சால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 159 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் விளையாட வந்த மும்பை அணியின் தொடக்கமும் சிறப்பாக அமையவில்லை.

ரோஹித் ஷர்மா 13 பந்துகள் விளையாடி 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 10 ஓவர் முடிவில் அந்த அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 62 ரன் எடுத்திருந்தது. டிவால்ட் பிரிவிஸ் (37 ரன்), திலக் வர்மா (21 ரன்), டிம் டேவிட் (34 ரன்) ரமன்தீப சிங் (13 ரன்) ஆகியோரின் நிலையான ஆட்டத்தால் மும்பை அணி 19.1 ஓவரில் 160 ரன் அடித்து வெற்றிபெற்றது.

இந்தத் தோல்வியால் டெல்லி அணி தகுதிச் சுற்றிற்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால் பெங்களூரு அணி தகுதிச் சுற்றுக்குச் செல்கிறது. மும்பை அணி வெற்றி உறுதியானபோது மைதானத்தில் ரசிகர்கள் ஆர்சிபி, ஆர்சிபி எனக் கத்தத் தொடங்கிவிட்டனர்.

நாளை நடைபெறவுள்ள பஞ்சாப், சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி எந்தவித முக்கியத்துவமும் இல்லாத போட்டியாகிவிட்டது. அடுத்த தகுதிச் சுற்றுப் போட்டி 24.05.2022 அன்று கொல்கொத்தாவில் குஜராத் அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையே நடக்கிறாது.

அதற்கடுத்த தகுதிச் சுற்றுப் போட்டி லக்னோ அணிக்கும் பெங்களூரு அணிக்குமிடையே 25.05.2022 அன்று கொல்கொத்தாவில் நடக்கவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.