அரசியலுக்கு வருவது பற்றி… தெலங்காணா முதல்வரின் பேரன் பரபரப்பு அறிவிப்பு!

Published:

telangana kcr - 2026

அரசியலுக்கு வருவது பற்றி கேசிஆர் பேரன் ஹிமான்ஷு முக்கிய அறிவிப்பு.!

ஹிமான்ஷு அரசியலுக்கு கட்டாயம் வந்து விடுவார் என்று பல அரசியல் தலைவர் கள் கூறி வந்தார்கள். ஆனால் ஹிமான்ஷு தன்னுடைய பொலிட்டிக்கல் என்ட்ரி குறித்து முக்கிய அறிவிப்பு செய்துள்ளார். ட்விட்டரை மேடையாகக் கொண்டு இதுகுறித்து அறிவித்துள்ளார்.

தனக்கு முக்கியமான இலட்சியங்கள் உள்ளன என்று கூறியுள்ளார் ஹிமான்ஷு.

kcr grandson tweet - 2026

தெலங்காணா முதலமைச்சர் கேசிஆரின் பேரன், அமைச்சர் கேடிஆரின் மகன் ஹிமான்ஷு குறித்து தனியாகக் கூற வேண்டிய தேவை இல்லை. மாநில மக்கள் அனைவருக்கும் ஹிமான்ஷு பற்றி நன்றாகத் தெரியும். அவ்வப்போது ஹிமான்ஷு கூட செய்தியில் ஹைலைட்டாக வந்து கொண்டிருப்பார்.

ஆயின் இப்போது ஹிமான்ஷு ட்விட்டரை மேடையாக கொண்டு செய்துள்ள அறிக்கை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஹிமான்ஷு ஒரு பரபரப்பு தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

முதல்வர் கேசிஆருக்கு வாரிசாக ஹிமான்ஷு அரசியலுக்கு வருவது கட்டாயம் என்று பல அரசியல் கட்சித் தலைவர்களோடு கூட டிஆர்எஸ் கட்சித் தொண்டர்களும் பேசி வந்தார்கள். தங்களுடைய வருங்கால தலைவர் ஹிமான்ஷு ராவு என்ற கண்ணோட்டத்தில் பல கட்சி ஆதரவாளர்கள் நினைத்து வந்தது இயல்பே.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

ஆனால் ஹிமான்ஷு மட்டும் தன் அரசியல் எதிர்காலம் குறித்து தற்போது கிளாரிட்டி கொடுத்துவிட்டார். தான் எதிர்காலத்தில் என்றுமே அரசியலுக்கு வரமாட்டேன் என்று தெளிவாக கூறியுள்ளார்.

தனக்கென்று முக்கியமான லட்சியங்கள் இருக்கின்றன என்றும் அவற்றை அடைவதே தன் இலக்கு என்றும் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இதுகுறித்து ஹிமான்ஷு போஸ்ட் செய்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img