avanthika - 2026

அடடா நடிகையாகும் அவந்திகா சுந்தர் சி! ஆசிர்வாதம் கேட்கும் குஷ்பூ!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா தமிழகம்
avanthika - 2026

தனது மூத்த மகள் அவந்திகா விரைவில் சினிமாத்துறைக்கு வரவிருக்கும் நிலையில் ரசிகர்களாகிய உங்களின் ஆசிர்வாதம் தேவை என நடிகை குஷ்பு சுந்தர் டிவிட் செய்துள்ளார்

தமிழ் சினிமாவில் 1990களில் கொடிக்கட்டிப்பறந்த நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு. ரஜினியின் தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரஜினி, கமல்,பிரபு, விஜயகாந்த் போன்ற முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் இதுவரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவருகிறது.

முக்கியமாக குஷ்புவிற்கு கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருந்துள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். பின்னர் முறைமாமன் படத்தில் நடித்த போது, இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நிலையில், அவருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உண்டு.

இந்நிலையில் தான் தனது மூத்த மகளாக அவந்திகா விரைவில் நடிக்கவுள்ளதாக குஷ்பு டிவிட்டர் வாயிலாகத் தெரிவித்திருக்கிறார்.

தனது டிவிட்டர் பதிவில், என் மூத்த மகள், லண்டனில் புகழ்பெற்ற நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் தனது படிப்பை வெற்றிக்கரமாக முடித்துள்ளார். தற்போது சொந்தமாக முயற்சிக்க வேண்டும் என அவர் எண்ணுவதால், அவருடைய போராட்டம் இனி மேல் ஆரம்பிக்கிறது.

Kushboo - 2026

ஆனால் அவரை நாங்கள் அறிமுகப்படுத்தமாட்டோம், யாரிடமும் பரிந்துரை செய்யமாட்டோம் என்றும் அவருக்கு உங்களுடைய வாழ்த்துக்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.