ராகுல் காந்தி ஐரோப்பாவுக்கு 4 நாள் பயணம்

இந்தியா சற்றுமுன்

04 July26 Rahul Gandhi - 2026

புது தில்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து என ஐரோப்பிய பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல், தில்லியிலிருந்து செவ்வாய்க்கிழமை நேற்று ஜெர்மனி கிளம்பி சென்றார். அங்கு, அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேசும் அவர், வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் கலந்துரையாட உள்ளார். மேலும் ஹம்பர்க், பெர்லினில் நடைபெறும் கூட்டங்களில் பேச உள்ளார்.

ஜெர்மனி சுற்றுப்பயணத்தை முடித்தபின் 24, 25 தேதிகளில் இங்கிலாந்து செல்லும் ராகுல், வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகளையும், வெளிநாடு வாழ் இந்தியர்களுடனும் கலந்துரையாடுகிறார். காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பின், அவர் செல்லும் 2வது வெளிநாட்டு சுற்றுப்பயணம் இது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.