1500x900 1708230 jain2 - 2026

டெல்லி சுகாதாரத்துறை மந்திரி வீட்டில் நகை பணம் கோடிகணக்கில் பறிமுதல்..

சற்றுமுன்

டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறையினர் அதிரடியாக கைது செய்தநிலையில் அவரது வீட்டில் ரூ.2.83 கோடி, 1.80 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியிம் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின்.

இதற்கிடையே, டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு உள்ளார் என அமலாக்கத்துறை தெரிவித்தது.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத் துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் வீடு, அவரது உதவியாளர் மற்றும் உறவினர்கள் இல்லங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.2.83 கோடி, 133 தங்க நாணயங்கள் உள்ளிட்ட 1.80 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளது.

சத்யேந்திர ஜெயின் வீட்டில் நகைகள், பணம் கைப்பற்றிய நிலையில், அவரை ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை என டெல்லி பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

1500x900 1708230 jain2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.