FB IMG 1658033829482 - 2026

கேரளாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆடி கர்கடகம் சிறப்பு பூஜைகள்..

சற்றுமுன்

கேரளாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆடி கர்கடகம் மஹா கணபதி ஹோமம்,ராமாயண பாகவதம் படித்தல் யானைகளுக்கு உணவு வழங்கும் பாரம்பரிய சடங்குகள் நடைபெற்றது.கேரளாவில் ஆடி மாதம் முழுவதும் இந்த நிகழ்வு நடைபெறும்.

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆடி மாத பூஜைகளுக்காக சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி பல்வேறு பூஜைகளை துவக்கினர்.

அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

தொடர்ந்து 5 நாட்கள் ஜூலை 21-ந் தேதி வரை ஆடி மாத சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். .இந்த நாட்களில் உஷபூஜை, கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.தினமும் காலையில் நெய்யபிஷேகமும் நடத்தப்படும்

வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐயப்பனின் படை வீடு கோயில்கள் அச்சன்கோயில் ஆரியங்காவு உட்பட அனைத்து கோயில்களிலும் அதிகாலை அஷ்டதிரவிய மஹா கணபதி ஹோமம் ராமாயண பாகவதம் படிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

FB IMG 1658033829482 - 2026
FB IMG 1658025604351 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.