நடிகர் சல்மான்கான், மான் வேட்டையாடியது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தி நடிகர் சல்மான்கான், கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்காக சென்றபோது, மான் வேட்டையாடியதாகவும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மானை வேட்டையாடிய வழக்கில் இருந்து சல்மான்கான் விடுவிக்கப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ஜோத்பூர் நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர்கள் சல்மான்கான், சைஃப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே உள்ளிட்ட 7 பேரிடமும் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை வரும் 27-ம் தேதிக்கு ஒதவைத்தது.



