images 82 - 2026

கோவையில் மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து..

சற்றுமுன் கோவை
images 82 - 2026
images 75 - 2026

கோவையில் மேம்பாலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக கார் மோதிக்கொண்டதில் காரில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தடுப்புகள் அமைத்தும் தவிர்க்க முடியாத மேம்பால விபத்து கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

images 78 - 2026
images 77 1 - 2026

இந்த நிலையில் அந்த பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால், வேகத்தடைகள் அமைக்கப்பட்ட ஒரு சில நாள்களிலேயே மீண்டும் ஒருவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இப்படி 3 பேர் பலியான நிலையில், மேம்பாலத்தின் இரு புறங்களிலும் இரும்பு பென்சிங் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனிடையே புதன்கிழமை கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற இரண்டு கார்கள் திருச்சி சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த அந்த கார்கள், மேம்பாலத்தில் சுங்கம் ரவுண்டானா அருகே போடப்பட்டிருந்த வேகத்தடைகளை கார் ஓட்டுநர்கர் இரண்டு பேரும் கவனிக்கவில்லை என்று தெரிகிறது. 

திடீரென பிரேக் பிடித்ததில் இரண்டு கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
தொடர்ந்து இந்த மேம்பாலத்தில் விபத்துகள் நடைபெற்று வருவது கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.