palamedu bjp meeting annamalai - 2026

பாலமேட்டில்… அண்ணாமலை முன்னிலையில் பாஜக.,வில் இணைந்த வேற்றுக் கட்சியினர்..!

சற்றுமுன் மதுரை
palamedu bjp meeting annamalai - 2026

பாலமேட்டில் பாரதிய ஜனதா கட்சி சிறப்பு ஆலோசனைக் கூட்டம் : மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

மதுரை மாவட்டம், பாலமேடு கஜேந்திரன் வளாகத்தில், பாரதிய ஜனதா கட்சியின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு, மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார் .

மாவட்டத் தலைவர் மகேந்திரன் கோவிந்த மூர்த்தி மாநிலச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன், விவசாய அணி மாநில துணைத் தலைவர் முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை தொழிலதிபரும் திரைப்பட நடிகருமான, மறவபட்டி கேஜி பாண்டியன், மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வீரவாள் கொடுத்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

palamedu bjp meeting annamalai2 - 2026

தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி, மாநிலத் தலைவர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு, பின்னர் கட்சி நிர்வாகிகள் ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமரன், ஒன்றிய தலைவர்கள் தங்கதுரை, சுபாஷ் சந்திரபோஸ், உள்ளிட்ட வட்டார ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Posts by ரவிச்சந்திரன், மதுரை: