images 2022 07 29T090911.637 - 2026

குமரி மாவட்டத்தில் நால்வருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள்..

சற்றுமுன்

குமரி மாவட்டத்தில் நால்வருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருப்பதால் அவர்களை மருத்துவர்கள் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்

கொரோனாவை தொடர்ந்து உலக நாடுகளை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கும், டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும் குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்துள்ளது. மேலும் அவர்களுடைய உடலில் பல இடங்களில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுவதைப்போன்ற தடிப்புகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் 4 பேரும் சந்தேகத்தின் பேரில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள், 4 பேருக்கும் குரங்கம்மை நோய் அறிகுறிகள் இருப்பதால் அவர்களை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் 4 பேருடைய ரத்த மாதிரிகளும் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

images 2022 07 29T090911.637 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.