FB IMG 1666109653954 - 2026

தாம்பரம் – திருநெல்வேலி-எக்மோர் இடையே தீபாவளி சிறப்பு ரயில்..

சென்னை
FB IMG 1666109653954 - 2026
images 8 - 2026

பொதுமக்கள் வர்த்தகர்கள் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்ததால் தாம்பரம் – திருநெல்வேலி இடையே தீபாவளி சிறப்பு ரயில் காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது . இந்த ரயில் முன்பதிவு இன்று புதன் கிழமை காலை 8 மணிக்கு தொடங்குவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது ‌

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் – திருநெல்வேலி ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, தாம்பரம் – திருநெல்வேலி பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 20 அன்று இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

மறு மார்க்கத்தில்,
திருநெல்வேலி – சென்னை எழும்பூர் பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06022) திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 21 அன்று மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி 1 , குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் 2, குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் 6, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 6, இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 2, ஒரு மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருநெல்வேலி – சென்னை எழும்பூர் பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு அக்டோபர் 19 இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது.என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.