FB IMG 1666625965547 - 2026

சபரிமலை கோவிலில் இன்று சித்திரை ஆட்ட திருநாள் பூஜை:

ஆலயங்கள்

சித்திரை ஆட்ட திருநாள் சிறப்பு பூஜைக்காக திங்கள்கிழமை மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது.இன்று ஒருநாள் சித்திரை ஆட்ட திருநாள் சிறப்பு பூஜைகள் நடத்தி இரவு நடை அடைக்கப்படும்.

FB IMG 1666625965547 - 2026

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 16ம் தேதி துவங்குகிறது. இதை முன்னிட்டு வருகிற 15ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது.

இந்த ஆண்டில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய தினமும் பக்தர்கள் முன் பதிவு செய்தவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட உள்ளனர். சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளின் படி தற்போது வரை நடைமுறையில் உள்ள 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழை பக்தர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்நிலையில் சித்திரை ஆட்ட திருநாள் பூஜை இன்று நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திங்கள்கிழமை மாலை திறக்கப்பட்டது.தந்திரி கண்டரரு ராஜீவரு பக்தர்கள் அனைவருக்கும் பல்ப் பிரசாதம் வழங்கினார்.

இன்று சித்திரை ஆட்ட திருநாள் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் இன்று ஒருநாள் மட்டும் கோவில் நடை திறந்திருக்கும். பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இந்த பூஜையில் பக்தர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருகைதந்துள்ளனர்.

FB IMG 1666609848227 - 2026
FB IMG 1666625949408 - 2026

இன்று அதிகாலை 5மணிக்கு நடை திறந்து நிர்மால்ய தரிசனம் நெய்யபிஷேகம் உட்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.