கணவனைக் கட்டி வைத்து.. கண் எதிரே 5 பேர் மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை!

Published:

vankodumai 1 - 2026

ஒரு பெண்ணின் கணவர் முன்னாடியே அவரை பலாத்காரம் செய்த கூட்டத்தை போலீசார் கைது செய்தனர்

ராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டத்தில் வசிக்கும் 20 வயதான பெண் கடந்த வருடம் தன்னுடைய கணவரிடமிருந்து குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வந்தார். அதன் பிறகு அவர் வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டார்

இந்நிலையில் அந்தப் பெண் சனிக்கிழமை இரவு சஜாவர் கிராமத்திற்கு அருகே அவரின் இந்நாள் கணவரோடு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அதை நோட்டமிட்ட அந்த பெண்ணின் முன்னாள் கணவரின் தம்பி அவரை பின் தொடர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு அவரும் அவரோடு வந்த மேலும் நால்வரும் சேர்ந்து அந்த பெண்ணையும் அவரின் கணவரையும் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்றுள்ளார்கள்.

பிறகு அந்த பெண்ணின் கணவரை ஒரு மரத்தில் கட்டி போட்டு விட்டு, அவரின் கண்முன்னாடியே அந்த பெண்ணை அனைவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடிவிட்டார்கள்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

அதைத் தொடர்ந்து அந்தப் பெண் தனது குழந்தையுடன் நகரின் சாலையை அடைந்து வழிப்போக்கர்களிடம் நடந்ததை கூறி உதவி கோரியுள்ளார்.
பிறகு வழிப்போக்கர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பிறகு போலீசார் வழக்கு பதிந்து ,அந்த பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை நடத்தினார்கள். பிறகு அந்த பெண்ணை இந்நிலைக்கு ஆளாக்கிய அவரின் முன்னாள் மைத்துனரும் அவரது இரண்டு கூட்டாளிகளும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக போலீசார் கூறினார்கள் .

Related articles

Recent articles

spot_img