petition in nellai collectorate - 2026

கலெக்டர் ஆபீஸில் கொடுத்த புகார் மனு… சாக்கடையில் கிடைத்த அதிசயம்!

புகார் பெட்டி Reporters Diary அடடே... அப்படியா? நெல்லை
petition in nellai collectorate - 2026

கொக்கிரகுளம் நெல்லை கலெக்டர் ஆபீஸில் புகார் கொடுத்தா அது பாளையங்கோட்டை சாக்கடையில் வரும் மேஜிக் – என்று தலைப்பிட்டு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்கள் மூலம் ஒரு புகார் பரவி வருகிறது. அதில்,

விடியலின் அற்புதம்! பிரமாதம் கலெக்டரே ! ரெண்டாம் தேதி திருநேலிக்கு கலக்டர் ஆபீஸ்ல ஒரு மனு கொடுத்தேன். அந்து மனு தொடர்பா எந்த நடவடிக்கையும் எடுக்கலங்க..

இன்னிக்கு வந்து மார்க்கெட் பக்கம் போயிருந்தப்ப ஒரு சாக்கடையில நிறைய மனு கிடந்திச்சு.. அதுல ஒன்னு நான் கொடுத்த மனு மாதிரி இருந்துச்சு.. எடுத்துப் பார்த்தால் நான் கொடுத்த மனுவேதாம்.. இத யாரு கிட்ட போயியா சொல்றது?

இப்படி திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறார் .. அம்பை தாலுகா கோவில் குளம் என்ற ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற முதியவர் .. என்ற தகவலுடன் படமும் இணைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.