ponmudi reaction - 2026

ஆளுநரை `போய்யா’ என்று அவமரியாதையுடன் கத்திய பொன்முடி!

சற்றுமுன் Featured அடடே... அப்படியா? சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
ponmudi reaction - 2026

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர் பொன்முடி அவமதித்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2023 – ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டபேரவை கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. இந்த, கூட்டதொடரில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசி கொண்டு இருந்தார்.இதனிடையே, ஆளுநர் பேசி கொண்டு இருக்கும் போதே, தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் அவரை பேச விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு முன்னரே, எடப்பாடி தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த எம். எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, தனது உரையை முடித்து கொண்ட ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார்.

இப்படிப்பட்ட சூழலில் தான், அங்கிருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆளுநர் சென்று கொண்டு இருக்கும் போதே ”போய்யா’ என்று கத்திய சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காணொளிதான், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.