IMG 20230124 WA0022 - 2026

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு..

சற்றுமுன்

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற அணைகளில் ஒன்றான மேட்டூர் அணை நீர்வரத்து 819கன அடியாக சரிவடைந்தது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணை நீர்வரத்து சரிந்து வருகிறது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 847கன அடியிலிருந்து வினாடிக்கு 819கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நேற்று காலை 106.02அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.54 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 72.20 டி.எம்.சியாக உள்ளது.

IMG 20230124 WA0022 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.