கணவனோடு சண்டை! கொன்று அந்த உறுப்பை வெட்டி உண்ட மனைவி!

Published:

murder
murder

பிரேசிலில் உள்ள 33 வயதுடைய பெண்மணி கிறிஸ்டினா. இவர் தனது கணவர் ஆண்ட்ரேவுடன் கடந்த 10 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பதாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பதாக பிரிந்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்பின் மீண்டும் அவர்கள் தங்கள் எதிர்காலத்தை நினைத்து மீண்டும் ஒன்றாக வாழ தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்கிடையே மிக அதிக அளவில் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அந்தப் பெண்மணி தனது கணவரை கொலை செய்துள்ளார்.

அதன் பின்பு அவரது ஆணுறுப்பை அறுத்து சமைத்ததாக இவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கொலை சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்ததாக கூறப்பட கூடிய நபரின் உடலை பார்த்த பொழுது நிர்வாணமாகவும் சிதைந்த நிலையிலும் இருப்பதை கண்டுள்ளனர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இதையடுத்து அவரின் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு இருப்பதையும் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின்னர்,கணவரை கொலை செய்த வழக்கில் அந்த பெண்மணியை கைது செய்ததுடன்,மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img